கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு Applications are welcome for scholarships.
கல்லுாரியில் படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லுாரிகள் போன்றவற்றில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி உதவித்தொகை பெற, முதுநிலை, பாலிடெக்னிக், தொழில் படிப்பு என, அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் https://umis.tn.gov.inஎன்ற இணைதயளம் வாயிலாக பெறப்படுகின்றன. மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும் 28ம் தேதி கடைசி நாள். ஏற்கனவே, உதவித்தொகை பெறும் மாணவர்கள், புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
நடப்பு கல்வியாண்டில் புதிதாக உதவித்தொகை பெற, முதலாம் ஆண்டு மாணவர்கள், முந்தைய ஆண்டில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, February 04, 2025
1
Comments
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு - வரும் 28ம் தேதி கடைசி நாள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84678221
Is it true?
ReplyDelete