தலைமை ஆசிரியர் பதவிக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்தல் ஏன்? - விளக்கம்
நடுநிலைப் பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யும்படி மா.கல்வி அலுவலரின் நடவடிக்கை பற்றி மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது. பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்கள்.
எனவே இதுபோன்று ஏனைய வட்டாரங்களிலும் பட்டியல் கேட்க்கப்படும், ஆசிரியர்கள் இதுதொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.