Breaking

Saturday, February 17, 2024

எங்கோ போகிறது மாணவ சமுதாயம்.... அரசு பள்ளி வகுப்பறையில் மது குடித்து மாணவர்கள் மோதல் - ஒருவர் டிஸ்மிஸ், 7 பேர் சஸ்பெண்ட்



The student community is going somewhere.... students clashed after drinking alcohol in a government school classroom - one dismissed, 7 suspended எங்கோ போகிறது மாணவ சமுதாயம்.... அரசு பள்ளி வகுப்பறையில் மது குடித்து மாணவர்கள் மோதல் - ஒருவர் டிஸ்மிஸ், 7 பேர் சஸ்பெண்ட்

புதுச்சேரி அரசு பள்ளியில் வகுப்ப றையில் மது குடித்து மாண வர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. இது தொடர் பாக ஒரு மாணவர் பள்ளி யில் இருந்து நீக்கப்பட்டார். 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக் கும் பல மாணவர்கள் மது அருந்துவதும், கஞ்சா பிடிப்ப தும் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால் சக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களே பயப்படும் நிலை உள்ளது. இப்பிரச்னை குறித்து புகார் தெரிவித்தும் பள்ளிக்கல்வி துறை கண்டுகொள்ளாமல் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந் தால் இப்பள்ளி மூடு விழாவை நோக்கி செல்லும் எனவும் தெரிவித்தனர். எனவே, மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்க கல்வித்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog