தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்./எம்/இ2/2023, நாள்.04.10.2023
பொருள்:
பள்ளிக் கல்வி - வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி 2023 ஆம் கல்வியாண்டில் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இறைவணக்க (பிரேயர்) நேரத்தில் வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுத்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. -
பார்வை:
செயலாளர், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா சென்னை அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனு நாள்.07.08.2023.
பார்வையில் காணும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா அமைப்பின் சார்பாக 1996 ஆம் ஆண்டு முதல் வெண்புள்ளிகள் நோயல்ல, பிறருக்கு தொற்றாது, பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை, கருத்தரங்குகள், மனிதசங்கிலிகள், பேரணிகள், மாராத்தான்கள் என் பல்வேறு வடிவங்களில் வெண்புள்ளிகள் உள்ளவர்களிடமும் பொதுமக்களிடமும் பரப்பி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக 2023 இல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து, எதிர்வரும் 11.10.2023 அன்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் எதிர்வரும் 11.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: உறுதிமொழி உறுதிமொழி
லூக்கோடெர்மா விட்டிலைகோ வை தமிழில் வெண்புள்ளிகள் என்றே அழைக்க வேண்டும்.
வெண்குஷ்டம் என்று தவறாக அழைப்பதை தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதை நானறிவேன்.
வெண்புள்ளிகள் உள்ள மாணவர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்க்க மறுப்பதோ பாரபட்சமாக நடத்துவதோ கூடாது. அப்படி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை நானறிவேன்.
வெண்புள்ளிகள் நோயல்ல பிறருக்கு தொற்றாது
பரம்பரை பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை வெண்புள்ளிகள் உள்ளவர்களிடமும் என் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறுவேன்
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.