Breaking

Friday, September 22, 2023

CBSE கல்வி உதவித் தொகை - விண்ணப்பிக்க அக். 18 கடைசி!

பெண் குழந்தைகளுக்கான சிபிஎஸ்இ கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க அக். 18 கடைசி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒற்றை பெண் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற அக். 18-க்குள் விண்ணப்பிக் கலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித் துள்ளது.

குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டுக்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு:

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பிளஸ்-1 வகுப்புக்குச் சென்றிருக் கும் ஒற்றை பெண் குழந்தைகளிடமிருந்து, கல்வி உதவித்தொகைக்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதுபோல, 2022-ஆம் ஆண்டில் இந்த கல்வி உதவித் தொகையைப் பெற்ற மாண விகளிடமிருந்து, கல்வி உதவித் தொகை திட்ட புதுப்பித்தல் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 இந்த விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அக்டோபர் கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.cbse.gov.inவலைதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog