பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை: மாநில அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 09, 2023

Comments:0

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை: மாநில அரசு

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8DAadhaar%20card%20not%20mandatory%20for%20school%20admission%20Odisha%20Govt
ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை இல்லாமல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அஸ்வதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியது...

மாணவர்களின் சேர்க்கை தடையின்றி, சுமூகமாக இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும்போது அசௌகரியத்தைச் சந்திக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி சேர்க்கைக்குப் பின், மாவட்டத்தின் பல்வேறு அலுவலங்களை ஒருங்கிணைத்து, ஆதார் அட்டை பெறுவதற்கு மாணவர்களுக்கு வசதி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சுமூகமாக பள்ளியில் சேர்க்க, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளை செயலாளர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84524244