சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!
சென்னையில் இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.