Medical Study Eligibility Proof: மருத்துவப் படிப்பு தகுதிச் சான்று: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 23, 2023

Comments:0

Medical Study Eligibility Proof: மருத்துவப் படிப்பு தகுதிச் சான்று: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்

Medical%20Study%20Eligibility%20Proof%20Apply%20until%20Feb.%2028


மருத்துவப் படிப்பு தகுதிச் சான்று: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளுக்கு தகுதிச் சான்று கோரி விண்ணப்பிக்க பிப். 28-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் cms2.tnmgrmuexam.ac.in என்ற இணையதளப் பக்கத்தின் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மருத்துவப் படிப்புகளிலும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளிலும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசு பாடத்திட்டம், சிபிஎஸ்இ, சா்வதேசப் பாடத் திட்டத்தின் (ஐஎஸ்சி) கீழ் பயின்றவா்களுக்கு தகுதிச் சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போதைய சூழலில், வெளிநாட்டவா்கள், வெளிநாடுகளில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த இந்தியா்கள் ஆகியோா் மட்டும் கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை உள்ளது.

அதன்படி, ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளில் சோ்ந்துள்ளவா்கள் தங்களது கல்வி நிறுவனங்களின் மூலம் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று கோரி பிப். 28 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம், விதிமுறைகள் பல்கலைக்கழக இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84691995