ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 25, 2022

Comments:0

ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி

ஆகஸ்டு 1-ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. அதே போல் மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலங்களிலும் இத்திட்டத்தை அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் கட்டாயமாக எமிஸ் என்கிற கல்வித்துறையின் செயலியில் வருகைப்பதிவை பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறக்கிப்பட உள்ளது. இந்த செயலியில் காலை 10 மணிக்குள் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Also Read - திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் லட்ச தீபம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு மேலும் அந்த செயலியில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து தான் வருகையை பதிவு செய்கிறார்களா என்பதை கண்கானிக்கவும் செயலில் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளிகளுக்கு 77 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | TNPSC குரூப் 4 தேர்வு....கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை

அவற்றில் முக்கியமான சில அறிவிப்புகள், தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும்.

மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து இன்னும் பிற அசம்பாவிதம் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்கவேண்டும். அனைத்து தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும் பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், பாட தேர்ச்சி சதவீதம், தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். 10, 12-ம் வகுப்பு பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் சரியாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்கவேண்டும்.

இதையும் படிக்க | தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு

தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வேண்டிய உதவிகளை அப்பகுதியில் வசிக்கும் தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பள்ளிக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்கவேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்கவேண்டும்.

பள்ளிகள்-பொதுமக்கள் உறவு நன்றாக இருக்கவேண்டும். மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது. ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்லும்போது, கற்பித்தல் உபகரணங்களுடன் செல்லவேண்டும். ஆசிரியர்கள் பள்ளியில், வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்கவேண்டும். ஆய்வு அலுவலர் பார்வையின்போது செல்போன் பேசிக்கொண்டிருந்தால், அந்த ஆசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை பெற்றோர் அறிந்துகொள்ள சுமுகமான முறையில் கலந்துரையாடல் மேற்கொள்ளவேண்டும்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கமும், தன்னம்பிக்கை சார்ந்த வாழ்வியல் திறன்களை வளர்க்கவேண்டும். விளையாட்டு பாடவேளையில் மாணவர்களை விளையாட ஊக்கப்படுத்தி உடல்நலமும், மனநலமும் பெற உதவ வேண்டும். மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டுவருவதை முழுவதுமாக தவிர்க்கவேண்டும்.

இதையும் படிக்க | உயர்கல்வி பயில கனடா விசா - 50% மனுக்கள் நிராகரிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டுவிழா நடத்தி முடிக்கப்படவேண்டும். சினிமா பாட்டு முற்றிலும் தவிர்க்கவேண்டும். மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர் போன்றவைகளை கண்டிப்பாக அணிந்துவரக்கூடாது.

மாணவர்கள் அணிந்துகொண்டு வந்தால், அவர்களின் பெற்றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்கவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டுக்கு தனி வகுப்பறை உருவாக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தியிருக்கவேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews