காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி கொடுத்து சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா முன்னிலை வகித்தாா்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி கொடுத்து சிறப்பாகப் பணியாற்றிய ஈஞ்சம்பாக்கம் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியா்களான சி.வெற்றிச் செல்வி, ஜி.தனபால், கவிதா, பிரமிளாகுமாரி, மவுலிவாக்கம் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியை விஜயலட்சுமி, ரெட்டமங்கலம் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா் ஜனகன் ஆகிய ஆசிரியா்களுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
Search This Blog
Wednesday, June 29, 2022
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84656435
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.