சைனிக் பள்ளிகளில் ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 23, 2022

Comments:0

சைனிக் பள்ளிகளில் ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம்

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 10 சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் செயல்முறை தொடங்கப்பட்டுளளது. இந்த https://sainikschool.ncog.gov.in/ecounselling இணையதளம் ஜூன் 26, 2022 வரை பயன்பாட்டிலிருக்கும்.

இந்தியாவில் 33 சைனிக் பள்ளிகள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சைனிக் பள்ளிகள் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய ஆயுதப் படைகளில் மாணவர்கள் சேர்வதற்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் விதமாக இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், சைனிக் பள்ளிகளாக மாற விரும்பும் தனியார்/மாநில அரசு/அறக்கட்டளைப் பள்ளிகள் சைனிக் பள்ளி சங்கத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு மதிப்பு மிக்க, கலாச்சாரம், பாரம்பரியம், தேசபற்றுடன் கூடிய கல்வியை வழங்கும்.

இந்த பள்ளிகளில், 40% சதவீத மாணவர் சேர்க்கை அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் (ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAM) , 60% அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கப்படுவார்கள். கடந்த மார்ச் மாதம் நாடுமுழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள விகாசா என்ற தனியார் பள்ளியும் அடங்கும்.

இந்நிலையில், பதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 10 சைனிக் பள்ளிகளில் உள்ள 534 இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை சைனிக் பள்ளிகள் சங்கம் தொடங்கியது. முதலாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த சுற்றில், சரியான பள்ளிகளை தேர்வு செய்ய முடியாமால் போன தேர்வர்களுக்காக இரண்டாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு – 2022 இல் தேர்வாகி பள்ளிகளில் இணைந்தவர்கள், முதல் சுற்றில் இடம் ஒதுக்கியும், அதற்கு விருப்பமில்லாதவர்கள், முதல் சுற்றில் தேர்வாகி சம்பந்தப்பட்ட பள்ளியில் இணைந்து பள்ளியில் கட்டணத்தை செலுத்தாதவர்கள் ஆகியோர் 2 ஆம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என்று சைனிக் பள்ளிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews