'ஹிஜாப், டர்பன்' அணிந்து வர அனுமதி தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 'நீட்' தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 09, 2022

Comments:0

'ஹிஜாப், டர்பன்' அணிந்து வர அனுமதி தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 'நீட்' தேர்வு

ஜூலையில் நடைபெற உள்ள 'நீட்' நுழைவுத் தேர்வில், மாணவ - மாணவியர் 'ஹிஜாப், டர்பன்' உள்ளிட்ட கலாசார உடைகள் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடத்தப்பட உள்ளது. கலாசார உடைஇதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.

தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு, neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில், மே 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை மே 7க்குள் செலுத்த வேண்டும்.தேசிய தேர்வு முகமை அறிவிப்பு:நாடு முழுதும், 557 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட, 30 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒடியா, குஜராத்தி, மராத்தி மற்றும் வங்கம் ஆகிய, 13 மொழிகளில் வினாத்தாள் தயாரிக்கப்படும்.ஆங்கில வினாத்தாளுடன், அந்தந்த மாநில தேர்வு மையங்களில் மட்டும், மாநில மொழி வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாள் மொழியை முன்கூட்டியே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டில், புதிதாக எந்த மாற்றமும் இல்லை. மாணவ - மாணவியர் 'டர்பன், ஹிஜாப், புர்கா' போன்ற கலாசார உடைகளை அணிந்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய, கலாசார ஆடைகளை அணிந்து வருவோர், சோதனைக்காக, ஒரு மணி நேரம் முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். மேலும், முக கவசம் அணிவது கட்டாயம்.'என் - 95' வகை முககவசம் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு நீக்கம்

தேர்வு எழுத விரும்புவோருக்கு, இந்த ஆண்டு டிச., 31ல் குறைந்தபட்சம், 17 வயது நிறைந்திருக்க வேண்டும்; உச்சபட்ச வயது எதுவும் கிடையாது. எந்த வயதினரும் தேர்வில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த, 2020ம் ஆண்டு வரை 'நீட்' தேர்வு எழுதுவதற்கு, பொது பிரிவினருக்கு, 20 வயது; இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 30 வயதும் உச்ச வரம்பாக இருந்தது. ஆனால், 2021 அக்டோபரில் தேசிய மருத்துவ கமிஷன் எடுத்த முடிவுப்படி, வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால், 17 வயது முடிந்த, எந்த வயதினரும் நீட் தேர்வை எழுதலாம். அதிகரிப்பு

'நீட்' தேர்வு பிற்பகல், 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடத்தப்பட உள்ளது. வழக்கமாக, மூன்று மணி நேரம் மட்டுமே தேர்வு நடக்கும். இந்த முறை, 20 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப் பட்டு உள்ளது. தேர்வு மையத்துக்கு பகல், 12:30 மணிக்கு முன்னதாக வந்து விட வேண்டும் என்றும், மதியம் 1:30 மணிக்கு பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியலினம், பழங்குடியினருக்கான தேர்வுக் கட்டணம், கடந்த ஆண்டு, 1,500 ரூபாயாக இருந்தது. தற்போது, 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக, செயல்முறை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வரியும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews