1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் - 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 03, 2022

Comments:0

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் - 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை தகவல்

செய்தி தவறானது

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது:

பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு தேர்வு ரத்து என செய்தி வெளியான நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை நடைபெறும். இறுதித் தேர்வுகள்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபெறும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி தொடங்கி மே.28ம் தேதி முடிவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டதாக அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது.

அதில், 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை எனவும் 6-முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்ததுடன் கண்டிப்பாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மேலும், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews