ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் போராட்டம்: கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 29, 2022

Comments:0

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் போராட்டம்: கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தகவல்

''கள்ளர் சீரமைப்பு துறை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்,'' என, தேனியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் தெரிவித்தார்.

இதையும் படிக்க | TNPSC& TRB வெளியிட்டுள்ள 6 அறிவிப்புகள் - PDF

அவர் மேலும் கூறியதாவது:

கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை மாறுதல் அளிக்கப்படுவது வழக்கம். துறை மாறுதல் பல ஆண்டுகளாக அளிக்கப்படாத நிலையில் கோரிக்கைகளை துறை உயர் அலுவலர்கள், அமைச்சர்களிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. இச்சூழலில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்பு சங்கங்களான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், கள்ளர் சீரமைப்பு கிளைகள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 25ல் மதுரையில் உண்ணாவிரதம் நடந்தது.போராட்ட முடிவில் சங்க நிர்வாகிகளுடன் ஆசிரியர்கள், கள்ளர் சீரமைப்பு பள்ளி இணை இயக்குனர் அலுவலகம் சென்று கோரிக்கையை முறையிட்டுள்ளனர்.

இதையும் படிக்க | G.O Ms.No. 16 Dt: March 18, 2022 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்

கோரிக்கைகளை ஏற்காததால் அங்கு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 55 பெண் ஆசிரியர்கள் உள்பட 91 பேரை நள்ளிரவில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு இப்பிரச்னையில் தலையீட்டு கள்ளர் சீரமைப்பு துறை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews