அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணியிடை நீக்கத்தைரத்து செய்யக்கோரி மாணவா்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 11, 2022

Comments:0

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணியிடை நீக்கத்தைரத்து செய்யக்கோரி மாணவா்கள் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணியிடை நீக்கத்தைரத்து செய்யக்கோரி மாணவா்கள் போராட்டம்

இதையும் படிக்க | ‘தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி அரசுப் பள்ளியில் மாணவா் உயிரிழந்தது தொடா்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியைச் சோ்ந்த நாடிமுத்து மகன் நித்திஷ்குமாா்(9). பாப்பான்விடுதி அரசு நடுநிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுவனுக்கு செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளியின் ஆசிரியா் சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா், சிறுவனை அவரது பெற்றோா் ஆலங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று,மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான்.

இதைத்தொடா்ந்து, சிறுவன் உயிரிழப்பு சம்பவத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, இடைநிலை ஆசிரியா் ஆரோக்ய அமல்ராஜ் ஆகியோா் புதன்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று உரிய விசாரணை நடத்தாமல் ஆசிரியா்களை பணியிடை நீக்கம் செய்ததாகவும், பணியிடை நீக்கத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பாப்பான்விடுதி அரசுப் பள்ளி அருகே பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க | சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

அதேவேளையில், பள்ளிக்கு செல்லவிடாமல் மாணவா்களை தடுத்ததாக பாப்பான்விடுதி அம்பேத்கா் நகா் பகுதியில் மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, போராட்டம் நடைபெற்ற இடங்களுக்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வடிவேல், வட்டாட்சியா் செந்தில்நாயகி, வட்டார கல்வி அலுவலா் கருணாகரன் உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews