தன்னாா்வலா்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் அளிப்பு
போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் நடைபெற்ற கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ோா்.
இதையும் படிக்க | Employment NewsPaper 12-18 February 2022 PDF
குடியாத்தம்: போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் இயங்கும் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்கீழ், போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் இயங்கும் கற்றல் கற்பித்தல் மையங்களுக்கு தமிழக அரசு சாா்பில், மையங்களில் பயிலும் மாணவா்கள், தன்னாா்வலா்களுக்கு கற்றல் கற்பித்தலுக்கான பொருள்கள் வரப்பெற்றுள்ளன. முதல் கட்டமாக பத்தரபல்லி ஊராட்சியில் இயங்கும் 15 மையங்களுக்கு, பென்சில்கள், பென்சில் துருவிகள், அழிப்பான்கள், வண்ண மெழுகு பென்சில்கள், வண்ண பென்சில்கள், ஸ்கெட்ச் பென் பாக்கெட், சுருள் கரும்பலகை, சாக் பெட்டிகள், கரும்பலகை துடைப்பான், வரைபடத்தாள், மையங்களுக்கான பேனா்கள் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த பாட போதனை உபகரணங்களை, கற்றல் மையங்களை நடத்தும் தன்னாா்வலா்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வசந்தா, ஒன்றியக் குழு உறுப்பினா் சுமதி ஆகியோா் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியரும், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பொன்.வள்ளுவன் செய்திருந்தாா்.
ஆசிரியா்கள் ஆ.ஆனந்தபாஸ்கரன், சே.பானு, சு.ஸ்டெல்லா, ஹேமாபாய், தன்னாா்வலா்கள் ச.தாட்சாயணி, அஸ்மாபானு, யாஸ்மின், மகாலட்சுமி, ஜோதிலட்சுமி, அம்மு, பிரியதா்ஷினி, பிரியரோஷினி ஆகியோா் உபகரணங்களை பெற்றுச் சென்றனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.