தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக்கல்வி அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பணிவரன்முறை செய்யப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் அனுப்பக் கோருதல் - சார்பு.
அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் (as per EMIS) உள்ள படிவங்கள் (1 மற்றும் 2) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதனை சரிபார்த்து படிவம் 3-ல் பாடவாரியாக மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் படிவம் 4-ல் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பணிவரன்முறை செய்யப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாடவாரியாகவும் மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை -1, 2 பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலர் கையொப்பமிட்டு 28.12.2021 நாளன்று நடைபெறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தின்போது நேரில் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Thursday, December 23, 2021
தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.