குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கவிமணி விருது - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 18, 2021

Comments:0

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கவிமணி விருது - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி - பொது நூலகங்கள் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக்கல்வித் எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்குதல்” ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித்(பொ.நூ.1) துறை

அரசாணை (நிலை) எண்.146

நாள் 22.10.2021

திருவள்ளுவராண்டு, 2052, பிலவ வருடம், ஐப்பசி 05.

படிக்கப்பட்டவை :

பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை எண்:43 வரிசை எண்.4.இல் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு நாள். 26.08.2021

பொது நூலக இயக்குநரின் கடித ந.க.எண்.5830/எ1/2021 நாள் 07:10.2021.

ஆணை.

26.08.2021 அன்று 2021-22-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், ஏனையவற்றுள் வரிசை எண். 4.இல் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்:

"குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்குதல்

"குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம். 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது வழங்கப்படும்.

2. மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பொது நூலக இயக்குநர் கீழ்க்காணும் விவரங்களை தெரிவித்துள்ளார்;

(i) இன்றைய மாணவர்களே வருங்கால இளைய சமுதாயம் என்பதனை கருத்தில் கொண்டு மாணவர்களை, நூலகங்களை நோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியின் முதற்கட்டமாக 18 வயதிற்குட்பட்ட மாணவர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்திடும் வகையில், பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ / மாணவியர்களால் படைக்கப்பட்ட கட்டுரைகள் / சிறுகதைகள் போன்ற படைப்புகளை செய்தித் தாள்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் மூலம் பெறப்படும்.

(ii) மேற்படி இளம் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்படும் சிறந்த படைப்புகளை தேர்வு செய்ய கீழ்க்கண்டவாறு 9 நபர்களைக் கொண்ட மாநில அளவிலான குழு அமைக்கப்படும். (iii) விருது பெற கீழ்க்காணும் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

(1) 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.

(2) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கு பெறலாம்.

(iv) இளம் எழுத்தாளர்களில் மேற்படி குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறந்த 3 இளம் எழுத்தாளர்களுக்கு "கவிமணி விருது"7 பதக்கம், கேடயம், சான்றிதழ் மற்றும் ரூ.25000,- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும் ரொக்கம் ஆகியவை வழங்கப்படும். இதற்கான செலவினத் தொகை கவிமணி விருதுக்கு தேர்வு செய்யப்படும் அந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

4. குழந்தை எழுத்தாளர்களுக்கு "கவிமணி விருது" வழங்குதல் சார்ந்து நாளிதழில் செய்தி வெளியிட்டு, அதன் மூலம் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று, மாநில அளவிலான குழு அமைத்து தேர்வு செய்யவும், அவ்வாறு தேர்வு செய்யப்படும் மூன்று சிறந்த எழுத்தாளர்களுக்கு நூலக ஆணைக்குழு நிதியிலிருந்து நபர் ஒருவருக்கு ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) ரொக்கம், பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்க அனுமதி வழங்குமாறு பொது நூலக இயக்குநர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews