குழந்தைகள் தின விழாப் போட்டிகள் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 08, 2021

Comments:0

குழந்தைகள் தின விழாப் போட்டிகள் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தொடக்கக் கல்வி - குழந்தைகள் தின விழா தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சென்னை.10 -2021, நவம்பர் 14-ம் தினத்தன்று அனைத்து தொடக்கக் பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலை நிகழ்ச்சிகள், பேச்சு மற்றும் கட்டடூரைப் போட்டிகள் நடத்துதல் - தொடர்பாக.

பார்வையில் காணும் கடிதத்தில் எதிர் வருகின்ற எதிர் வருகின்ற 2021, நவம்பர் 14 ம் தினத்தன்று (14.11.2021) ஒவ்வொரு வருடமும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு அவர்களின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். எனவும், ஆனால் தற்போது கொரானா தொற்று காலத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதால் ஒவ்வொரு துறையும் அவரவர்களுக்கென குழந்தைகள் தினவிழா கொண்டாடுவதால், அவரவர்களுக்கென வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு. நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவும்

2021, நவம்பர் முதல் பி5 முந தொடக்க கல்வி இயக்ககம் சார்ந்த அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் அதிகபட்சம் 20 மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளிகள் அனைத்தும் தொடக்கக் கல்விதுறையால் அனுப்பப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் գան அனைத்து பள்ளிகளும் இயங்க அனுமதிக்கப்பட்டன. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பொருட்டும், மீண்டும் எழுச்சிபெற்று ஊக்கத்துடன் தனது கல்வியை தொடங்குவதற்கும், விளையாட்டு போன்ற செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்தவும், அந்தந்தத் துறையினரால் வகுத்து அளிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள விதிகளின்படி நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என ஆணையம் கருதுவதால், வருகின்ற நவம்பர் 14-ம் தினத்தை ஒரு சிறப்பு நேர்வாக கொண்டு குழந்தைகளிடையே ஒரு சிறந்த எழுச்சியை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எனவே மேற்படி நிகழ்ச்சிகளை நடத்தி, நவம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை அனுப்பிவைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி நிகழ்ச்சிகளை நடத்தி அறிக்கையினை நவம்பர் 25 -ம் தேதிக்குள் இரு நகல்களில் அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews