எம்.பி.பி.எஸ்., சேர்க்கை விண்ணப்பம் அரசு ஒதுக்கீட்டிற்கு கட்டணம் இல்லை
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - ஆயுர்வேதா மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு இன்று சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.
அதை தொடர்ந்து, நீட் தேர்வு சார்ந்த படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்த சென்டாக் நிர்வாகம் ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா (பி.ஏ. எம்.எஸ்), கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி.,) படிப்புகளுக்கு இன்று 8ம் தேதி முதல், சென்டாக் இணையதளத்தில் (www.centacpuducherry.in), 22ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அரசு மற்றும் நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., மற்றும் சுயநிதி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.நீட் தேர்வில் 108 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் எடுத்த எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.நீட் தேர்வில் 138 மதிப்பெண் பெற்ற பொது பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.கட்டணம் எவ்வளவுநீட் அடிப்படையிலான படிப்புகளுக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க, கட்டணம் இல்லை.
புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்கள் தனியார் நிர்வாக இடங்களுக்கு விண்ணப்பிக்க 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் விண்ணப்பம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.