விடுமுறை நாள்களை ஈடுகட்ட அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் நடக்கவில்லை. இருப்பினும் ‘வாட்ஸ் ஆப்’, இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் செப். 1-ஆம் தேதி முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கையால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்குப் பிறகு தீபாவளி மற்றும் மழை ஆகிய காரணங்களால் பள்ளி மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை முதல் பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த ஆசிரியா்கள் தயாராகி வருகின்றனா். அரசுப் பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலா்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனா்.

ஏற்கனவே சனிக்கிழமைகளில் பள்ளி உள்ளது ஏதோ புதிதாக போடுவதைப் போல இருக்குது உத்தரவு
ReplyDelete