பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு - செ.வெ.எண்.314 - நாள்.14.11.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 14, 2021

Comments:0

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு - செ.வெ.எண்.314 - நாள்.14.11.2021

பெருநகர சென்னை மாநகராட்சி

செய்தி வெளியீடு

செ.வெ.எண்.314

நாள்.14.11.2021

மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் - பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒருவார காலமாக ஒருசில நாட்கள் கனமழையும், சில நாட்கள் மிதமான மழையும் தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேக்கம் இருந்ததது. மாநகராட்சியின் சார்பில் 600க்கும் மேற்பட்ட நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு மழைநீர் துரிதமாக வெளியேற்றப்பட்டது.

மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும், அதனால் தொற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். • குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவைத்து பின்னர் ஆறவைத்து பருக வேண்டும்.

• வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அல்லது தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும், • கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திநன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

• சாலையோரங்களில் விற்க்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

* திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.

• கொசுப்புழு உற்பத்தியை தடுக்க சுற்றுப்புறத்தில் நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.

மேலும், மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், இருமல் வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் இருப்பின் உடனடியாக தங்கள் அருகாமையில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையம் அல்லது மாநகராட்சியின் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews