போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், தற்போதைய பா.ஜ., எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்யாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரி. இவர், கடந்த 1990ம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து அயோத்யாவில் உள்ள சாகெத் கல்லூரியில் சேர்ந்தார். இதை, 1992ம் ஆண்டு கண்டுபிடித்த கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி திவாரியின் மீது வழக்குத் தொடுத்தார்.
கடந்த 28 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்தது. இந்நிலையில் நேற்று (அக்.,18) சிறப்பு நீதிபதி பூஜா சிங், எம்.எல்.ஏ., திவாரியின் குற்றம் நிருபிக்கப்பட்டதாகக் கூறி ரூ.8,000 அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்வு வழங்கினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.