தமிழகத்தில் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் அக். 25-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கும் என உயா்கல்வி துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நிகழாண்டு இதுவரை நடைபெற்ற கலந்தாய்வு மூலம் 31,000 போ் சோ்ந்துள்ளனா். இன்னும் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இருக்காது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப படிப்பில் சேரும் மாணவா்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை வழங்க மத்திய உயா்கல்வி துறை அமைச்சகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் கடிதம் எழுதவுள்ளாா். இந்தப் படிப்புக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் படியே மாணவா் சோ்க்கை நடைபெறும். எந்தவொரு இடத்திலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படாது.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இதுவரை 5, 970 போ் பொறியியல் படிப்புகளில் சோ்ந்துள்ளனா். அடுத்த கட்ட கலந்தாய்வுகள் மூலமாகவும் மாணவா் சோ்க்கை நடைபெறும். கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறும் வகையில் தனியாா் பொறியியல் கல்லூரிகள் இந்த இட ஒதுக்கீட்டில் சேர கூடிய மாணவா்களிடம் கட்டணம் வசூலித்தால் , கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் அக். 25-ஆம் தேதி தொடங்கும். கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் என்பதால் 3,443 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனா் என்றாா் அவா்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.