தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கோவை மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வந்த சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்ற குழந்தைகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை மூலம் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சியை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் 11.30 மணி வரை குழந்தைகளை காணச் செய்யுமாறு தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பயிற்சிமையங்களில் கல்வி பயிலும் குழந்தைகளின் வீட்டில் தொலைக்காட்சி இருக்கும் பட்சத்தில் அவர்களது வீட்டிலேயே கல்வி தொலைக்காட்சியை காணும்படி செய்யவேண்டும்.
தொலைக்காட்சி இல்லாதபட்சத்தில், அந்த மாணவர்களை தன்னார்வபயிற்றுநர்களின் வீட்டிலோ அல்லது தொலைக்காட்சி இருக்கும்மற்ற மாணவர்களின் வீட்டுக்கோ வரவழைத்து தொலைக்காட்சியை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.