திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி குறித்து கட்டணமில்லா குறுகிய கால சான்றிதழ் படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 18, 2021

Comments:0

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி குறித்து கட்டணமில்லா குறுகிய கால சான்றிதழ் படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி குறித்து சான்றிதழ் படிப்பும் குறுகிய கால படிப்பும் விரைவில் அறிமுகம்.


கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு.


தந்தை பெரியாரின் பெயரில் இருக்கை அமைக்கப்படும் சமூகநீதி குறித்து சான்றிதழ் படிப்பும் குறுகிய கால படிப்பும் இந்த கல்வியாண்டில் தொடங்கப்படுகிறது


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி அறிவித்ததன் அடிப்படையில், செப்டம்பர் 17ஆம் தேதி சமூக சீர்திருத்தவாதி தந்தைபெரியாரின் பிறந்தநாளை "சமூக நீதிநாளாக” அனுசரிக்கும் வகையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் "சமூகநீதி" உறுதிமொழி ஏற்பு மற்றும் "பெரியாரின் புரட்சிப் பயணம்” என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது. இந்திகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ. பார்த்தசாரதி அவர்களின் தலைமையுரையின் போது இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு சமூக சீர்திருத்தவாதியின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறித்து உறுதிமொழி எடுக்க அரசாணை பிறப்பித்து நடைமுறைபடுத்தியதற்கு தமிழக அரசைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. கீ. வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடப்பு கல்வியாண்டு முதல் "சமூக நீதி" என்னும் தலைப்பில் குறுகியகால மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயிற்சிக் கட்டணமின்றி வழங்கப்படும் எனவும், இப்படிப்பில் 15 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் படிக்கலாம் என்று அறிவித்தார். மேலும் திராவிடக் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் "பெரியார் இருக்கை" அமைக்கப்படும் என்று தெரிவித்தார். திராவிடக் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் "பெரியாரின் புரட்சிப் பயணம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், அவர் பெரியாருடன் பணியாற்றிய அனுபவத்தின் வாயிலாக பெரியாரின் சமூகச் சிந்தனைகள், சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு சம உரிமை போன்ற சித்தாந்தங்களால் சமூக நீதியை உறுதிசெய்ய பாடுபட்டார் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கு. ரத்னகுமார் வாழ்த்துரை வழங்கினார்.


முன்னதாக சமூக அறிவியல் புல இயக்குனர் பேராசிரியர் ம.வே. சுதாகரன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக சமூக அறிவியல் புல உதவிப் பேராசிரியை திருமதி ஜோ. ரெனிஆரத்தி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை சமூக அறிவியல் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் த.திருமால்ராஜா ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews