ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், புதிய அரசை அமைத்துள்ள நிலையில், சனிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குத் திரும்புமாறு கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலிபான் அரசின் கல்வித் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கை, முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், மாணவிகள் பள்ளிக்கு வருவது குறித்தோ, வயது கட்டுப்பாடு குறித்தோ தெரிவிக்கப்படவில்லை. இதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியை தலிபான்கள் மறுக்க வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது.
முன்னதாக, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வர தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, இன்னும் பல மாகாணங்களில் பெண்கள் தங்களது பணிக்குத் திரும்பவில்லை. சுகாதாரத் துறை, மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் மட்டும் தற்போது வரை பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.