மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால்தான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை எந்த ஒரு அறிவியல் ஆய்வும் ஆதாரபூா்வமாக தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இதுதொடா்பாக நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே. பால் வியாழக்கிழமை கூறுகையில், ‘மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமா? அதிலும் யாருக்கு செலுத்த வேண்டும் என்ற அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைக்கு சில நாடுகள்தான் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளன. எனினும், பள்ளிகள் திறப்பதற்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுவது அவசியமாகும். காற்றோட்ட வசதி, இருப்பிட வசதி, முகக்கவசம் அணிவது ஆகிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகள் திறப்பின்போது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அதேநேரத்தில், ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்கள், பெற்றோா்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தினால்தான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை தற்போதுவரை எந்த ஒரு ஆய்வும் ஆதாரத்துடன் கூறவில்லை. உலக சுகாதார அமைப்பும் இதுகுறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை.
நமது நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தினால் எந்த அளவுக்கு பயன் தரும் என்ற ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளுக்கு செலுத்த உரிமம் பெற்ற ஸைடஸ் கெடிலா தடுப்பூசி எப்போது முதல் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அறிவியல் அமைப்புகள் ஆலோசனை நடத்தி வருகின்றன’ என்றாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.