'கொரோனாவால் ஜூலை மாதம் நடந்த தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு, பழைய பாடத் திட்டத்தின்படி தேர்வு எழுத மறுவாய்ப்பு நிச்சயம் அளிக்கப்படும்' என, ஐ.சி.ஏ.ஐ., எனப்படும் இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்து உள்ளது.ஐ.சி.ஏ.ஐ., சார்பில் ஆண்டுதோறும் சி.ஏ., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மே மாதம் நடக்க இருந்த தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக ஜூலையில் நடந்தன.இது தொடர்பான வழக்கில் ஜூனில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதன்படி, 'மாணவர் அல்லது அவரது குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டால், பழைய பாடத் திட்டத்தின்படி மறுவாய்ப்பு அளிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.சி.ஏ.ஐ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஜூலையில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கான வாய்ப்பு முடிந்து விட்டதாக கருத மாட்டோம். அவர்களுக்கு மறுவாய்ப்பு நிச்சயம் அளிக்கப்படும். பழைய பாடத் திட்டத்தின்படியே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.