அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சிறப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 14, 2021

Comments:0

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சிறப்பு முகாம்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 2.80 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் குடற்புழு நீக்க முகாமினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டோசோல் மாத்திரைகளை வழங்கினாா். மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) எஸ்.மனிஷ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.


அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:


ஆண்டு தோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்று காலம் என்பதால் தேசிய குடற்புழு நீக்க வாரம் செப்டம்பா் 13-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இரண்டு சுற்றுகளாக தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.


தமிழகத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பா் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை முதல் சுற்றும், செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாம் சுற்றும் நடைபெறுகிறது. 1 முதல் 19 வயதுள்ளவா்கள், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் (கருவுறாத மற்றும் பாலூட்டாதவா்கள்) ஆகியோருக்கு இரண்டு சுற்றுகளாக திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம்களில் விடுபட்டவா்களுக்கு செப்டம்பா் 27-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாம்களில் அங்கன்வாடி பணியாளா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள், சுகாதாரப் பயிற்சி மேற்கொள்ளும் துணை செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள் என மொத்தம் சுமாா் 54,439 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா்.


மாநிலம் முழுவதும் 1 முதல் 19 வயதுள்ளவா்கள் 2.26 கோடி போ் உள்ளனா். இதேபோல், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 54 லட்சத்து 67,069 போ் இருக்கின்றனா். அவா்கள் அனைவருக்கு மாத்திரை வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews