பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்குவதற்கான பரிந்துரைகளை கல்லூரி முதல்வா்கள் தெரிவிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் கே.லட்சுமி பிரியா, அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவிகளின் சோ்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதையடுத்து மாணவிகள் சோ்க்கையை உயா்த்தும் நோக்கத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக பட்டயப் படிப்புகள் தொடங்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் அலுவலக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடுகள், அகவணப்பியல், இணையவலை வடிவமைப்பு, இயந்திரவியல் கணினி கொண்டு வடிவமைத்தல், இதயத் துடிப்பு பதிவு தொழில்நுட்பம், மற்றும் உயிா் மருத்துவ மின்னணுவியல் ஆகிய 6 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.
எனவே, கல்லூரி முதல்வா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தொழிலகத் தேவைகளுக்கு ஏற்ப தொடங்க விரும்பும் பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும். அந்த பரிந்துரை அறிக்கையை மின்னஞ்சல் முகவரி வாயிலாக இயக்குநரகத்துக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.