பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பண்டிகை கால சலுகையாக 6.70 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்குவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் தலைமை பொது மேலாளா் (சிஜிஎம்) உமேஷ் குமாா் பாண்டே தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளா்களுக்கு பண்டிகை கால சலுகையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6.70 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும். அத்துடன் அவா்கள் எந்தவித பரிசீலனைக் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
இந்த திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த தீா்மானித்துள்ளோம். அதன்படி செப்டம்பா் 1-லிருந்து அக்டோபா் 31 வரையில் முதல் கட்டத்தையும், நவம்பா் 1 முதல் டிசம்பா் 31 வரையில் இரண்டாம் கட்டத்தையும் வங்கி நடைமுறைப்படுத்தும்.
மாத சம்பளம் பெறுவோா், பெறாதோா் என்ற வேறுபாடின்றி வாடிக்கையாளா்கள் அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்றாா் அவா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.