அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மார்ச் -2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் - சார்பு. - Final chance for SSLC NOMINAL ROLL CORRECTION - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 06, 2021

Comments:0

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மார்ச் -2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் - சார்பு. - Final chance for SSLC NOMINAL ROLL CORRECTION

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- மார்ச் -2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர். பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு – வழங்குதல் - சார்பு.

1. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள், நாள்.27.01.2021

2. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள். 05.02.2021.

3. இவ்வலுவலக கடிதங்கள் ந.க.எண்.086254/எப்.1/2020. நாள்.10.02.2021 மற்றும் 11.02.2021.

4. இவ்வலுவலக கடித நாள்.04.08.2021. ந.க.எண்.025639/எப்.1/2021,

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மார்ச்-2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், அதன் பிறகு பார்வை (2) மற்றும் (J)-வ் காண் கடிதத்தின் வாயிலாக பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இரண்டு முறை வாய்ப்புகளும் அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டன. மீளவும் பார்வை (4)-ல் காணும் கடிதம் வாயிலாக பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பும் வழங்கப்பட்டது. தற்போது, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி இவ்வலுவலகத்தில் கடிதங்களும், தொலைபேசி வாயிலாக கோரிக்கைகளும் வந்தவண்ணம் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்று பலமுறை பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி அடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.மாணவர்களது நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக தற்போது வழங்கப்படும், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யக்கோரி இவ்வலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின், அரசின் நிதிச்செலவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்ற அறிவிப்போடு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 08.09.2021 முதல் 11.09.2021 வரை இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமையாசிரியர்களும் பிழையில்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews