TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களா நீங்கள்... வாட்ஸ்ஆப்பில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடநூல் பெறுவது எப்படி..? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 21, 2021

Comments:0

TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களா நீங்கள்... வாட்ஸ்ஆப்பில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடநூல் பெறுவது எப்படி..?

டிஎன்பிஎஸ்சி தேர்வு தயாராகி வருபவர்களா நீங்கள்... வாட்ஸ்ஆப்பில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடநூல் பெறுவது எப்படி..?

அரசுப்பணி தேர்வு மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி பாடநூல்: வாட்ஸ்-அப்பில் முன்பதிவு செய்தால் போதும்! குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ போன்ற அரசுப்பணித்தேர்வுகளை நோக்கி காத்திருக்கும் மாணவர்களின் நலனுக்காக வாட்ஸ்-அப்பில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் எனவும் அதற்கு முன்னதாக முன்பதிவு செய்வது கட்டாயம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் வீரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக புதிய பாடத்திட்டத்தின் படி, அனைத்து வகுப்பு சமச்சீர் புத்தகங்களைக் கொண்டு தேர்வின் அடிப்படையில் பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது. "இதுவரை 6 முதல் 12ம் வகுப்பின் சமர்ச்சீர் புத்தகங்களை மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது அகாடமி வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ் பாடநூல் நிச்சயம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என அகாடமி இயக்குநர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி பாடநூல் புத்தகத்தை பெற விரும்புவோர், 91760 84468 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக உங்களின் முகவரியை முழுவதுமான டைப் செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனையடுத்து முன்பதிவு செய்த அனைவருக்கும் பிடிஎப் வடிவில் பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித்தமிழ் ஐ. ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் நேரிலோ அல்லது 91763 92791, 99439 46464 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews