CBSE 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு.
cbseresults.nic.in இணையதளத்தில் வெளியீடு.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 3) மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் CBSE இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள்
கடந்த மாதங்களில் ஏற்பட்ட கொரோனா பேரலை காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக CBSE கல்வி வாரியம் அறிவித்தது. இதையடுத்து இம்மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்களை வெளியிடும் பணிகளை CBSE வாரியம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று CBSE 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மதியம் 2 மணியளவில் வெளியிடப்பட்டது. இதையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் நிலவியது. எனினும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இறுதி மதிப்பீடுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று இருப்பதால், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கீடுகள் இன்னும் நிறைவடையவில்லை.
அதனால் இந்த வாரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என CBSE தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்தது. இதனிடையே தான் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 3) மதியம் 12 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி CBSE வாரியத்தின் 18 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர். இம்மாணவர்கள் CBSE வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.