-'கலை, அறிவியல் படிப்புகள் மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி செயல்முறைகள் உள்ளிட்ட படிப்புகளையும் தொலைநிலையில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும்' என, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, இளம் மாணவர்கள் மட்டு மின்றி, அனைத்து துறையினருக்கும், அனைத்து வகை படிப்புகளும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. தங்களுக்கு பிடித்தமான பாடப் பிரிவுகளை, எந்த கட்டுப்பாடுமின்றி மாணவர்கள் மற்றும் தொழிற்துறையினர் படிக்க, 'ஆன்லைன்' வழி படிப்புகள்அதிமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதே நேரம் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை மட்டும் தொலைநிலை கல்வியில் நடத்த ஏற்கனவே அனுமதி அளிக்கப்படுகிறது.தற்போது, செயற்கை நுண்ணறிவு, கணினி செயல்முறைகள் உள்ளிட்ட படிப்புகளையும் தொலைநிலை கல்வி யில் நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு:திறந்த நிலை மற்றும் தொலைநிலை படிப்புகளை நடத்தும் பல்கலை மற்றும் கல்லுாரிகள், கணினி செயல்முறைகள், மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, 'லாஜிஸ்டிக்ஸ்' என்ற சரக்குகள் கையாளும் படிப்பு, 'டேட்டா சயின்ஸ்', சுற்றுலா மற்றும் போக்குவரத்து போன்ற பாட பிரிவுகளையும் நடத்தலாம்.இதற்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யிடம் மட்டுமின்றி, ஏ.ஐ.சி.டி.இ.,யிடமும் உரிய அனுமதி பெற வேண்டும்.அதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி கடைசி நாள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.