திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்தார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு மாணவியர் சேர்க்கை 1000ஐ எட்டி உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞானசேகரன் நேற்று தனது மகளை பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு சேர்த்தார். முன்னதாக இவரது மகள் கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வந்தார்.
இதுகுறித்து நீதிபதி ஞானசேகரன் கூறுகையில், ‘‘நான் மற்றும் எனது மனைவி இருவரும் அரசு பள்ளியில்தான் படித்தோம். எனது மகளையும் அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என எண்ணி இருந்தேன். தற்போது அரசு பள்ளிகளில் தனியாருக்கு நிகராக சிறந்த முறையில் கல்வி கற்பிக்கின்றனர். இதனால் பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எனது மகளை சேர்த்துள்ளேன்’’ என்று தெரிவித்தார்
Search This Blog
Saturday, August 07, 2021
Comments:0
அரசு பள்ளியில் மகளை சேர்த்த திண்டுக்கல் நீதிபதி
Tags
# Admission
# CourtOrder
# SCHOOLS
# STUDENTS
STUDENTS
Labels:
Admission,
CourtOrder,
SCHOOLS,
STUDENTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.