தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பணி தலைமையாசிரியர்கள், பதவி உயர்வு போன்றவற்றிற்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் கலந்தாய்வு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வருடம் தோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கு கலந்தாய்வு நடத்தி அதன் மூலம் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வருடம் மொத்தமாக கலந்தாய்வு நடத்தப்படாமல் ஒரு சில முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெற்றது. இதற்கு ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வருடம் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அனைவர்க்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளிகள் திறக்கும் முன் பதவி உயர்வு, பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒரு பள்ளியில் ஓராண்டு நிறைவு செய்தவர்களும் பணி நிறைவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
உபரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பள்ளிகள் தரம் உயர்வால் அளிக்கப்படும் பணியிட மாறுதல் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபட வேண்டும். ஒரு முறை முன்னுரிமையை கலந்தாய்வில் பயன்படுத்தியவர்கள் அடுத்தடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னுரிமையை பயன்படுத்தாத வண்ணம் சட்ட திருத்தும் செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.