நம் நாட்டில் கோவிட் பெருந்தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2வது வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பிப்ரவரி மாதத்தில் கோவிட் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவியதால் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்புகள் மட்டுமின்றி அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கோவிட் 2வது அலையின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. இதனால் பள்ளிகளை திறப்பான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாநிலங்களும் எடுத்து வருகின்றன. அந்த வகையில், 'இன்றிலிருந்து 9 - 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும்' என, கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
மல்லேஸ்வரம் பகுதியில் திறக்கப்பட்ட பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுடன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உரையாடினார். 'மாணவர்கள் பள்ளிக்கூடம் வந்து படிப்பதற்கு ஏதுவாக, அவர்களை கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க அரசு தீவிர தடுப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்' எனத் தெரிவித்தார். 'வரும் அக்டோபர் மாதத்தில் கோவிட் தொற்றின் 3வது அலை உச்சமடையும்' என, வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.