தமிழகத்தில் அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உறுதி:
தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான 3-வது நாள் விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது பேசிய அவர், ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்திருக்கிறீர்கள். அதில் ஒவ்வொரு நதியிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர் மேலாண்மைக்கு நீரியல் வல்லுநர்களை கொண்ட குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். மேலும் கூடுதல் கல்வி நிலையங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், இந்த நிதிநிலை அறிக்கையானது 6 மாதத்திற்கு மட்டுமே, அடுத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். அரசு பள்ளிகளில் படிப்பது வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நாம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளோம். இதனால் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் கோடி என வருடத்திற்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.