தமிழகத்தில் தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
NSP இணையதளம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் முயற்சியாலும், மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் NMMS தேர்வில் வெற்றி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சத்தால் கல்வி உதவித்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு UDISE பள்ளிக் குறியீட்டிற்கு ஒரு தலைமை ஆசிரியரின் ஆதார் விவரங்கள் மட்டுமே NSP இணையதளத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தலைமை ஆசிரியர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை கவனமாக செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.