தொடரும் ஆன்லைன் வகுப்புகளால் சலிப்பு- அலகுத் தேர்வில் ஆர்வம் காட்டாத பள்ளி மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 17, 2021

Comments:0

தொடரும் ஆன்லைன் வகுப்புகளால் சலிப்பு- அலகுத் தேர்வில் ஆர்வம் காட்டாத பள்ளி மாணவர்கள்

தொடரும் ஆன்லைன் வகுப்புகளால் சலிப்பு- அலகுத் தேர்வில் ஆர்வம் காட்டாத பள்ளி மாணவர்கள்

விருத்தாசலம் அருகே ஊத்தங்கால் நடுநிலைப் பள்ளியில் வினாத் தாள்களை பெற்று, வீடுகளுக்குத் திரும்பும் மாணவர்கள்.

விருத்தாசலம்
அரசுப் பள்ளிகளில் அலகுத் தேர்வு ஆரம்பமாகி உள்ளது. இதற்கு மாணவர்களிடையே ஆர்வ மும் ஆதரவும் இல்லை.
பள்ளிகள் மூடப்பட்டு, கிட்டத்தட்ட 17 மாதங் கள் முடிவடைந்த நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை ஒளிபரப்புவது, வெகு சில இடங்களில் ஆசிரியர்கள் கிராமங்களுக்குச் சென்று பாடம்எடுப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற் றாலும், அவை மாணவர்களுக்கு முழுமையான பலனை அளிக்கவில்லை.

கரோனா பரவல் இன்னும் முற்றுப் பெறாத நிலையில், பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை தயக்கம் காட்டி வருகிறது.

‘பள்ளிக்குச் செல்லாமலேயே, படிக்காம லேயே இரு வருடங்களாக தேர்ச்சி’ என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களின் கல்வித்தரம் குறித்து பெற்றோரிடத்தில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே நடப்புக் கல்வியாண்டுக்கான அலகுத் தேர்வை நடத்தி முடிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பதன் பேரில், அலகுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற் காக ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழுக்களில் வினாத்தாள்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், மாணவர்கள் இத்தேர்வில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை; முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களிடம் தேர்வை அணுகுவதில் சற்று அலட்சியம் இருப்பதை காண முடிகிறது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இத்தேர்வில், ஆசிரியர்கள் மூலம் பெறப்படும் வினாத் தாள்களில் இடம்பெற்ற கேள்விகளுக்கு, மாணவர்கள் விடை எழுதி, அவற்றை படம் பிடித்து மீண்டும் வாட்ஸ்அப் மூலமாக ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் விடைத் தாள்களை படியெடுத்து, அவற்றை திருத்தி ஆசிரியர் மதிப்பெண் அளிக்கிறார். “நாங்கள் அனுப்பும் வினாக்களுக்கு, விடைகளை புத்தகத்தை பார்த்து தான் மாணவர்கள் எழுதுவார்கள்; இது ஊரறிந்த ரகசியம். அப்படிஎழுதினாலும், அதன் மூலம் பாடங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குறைந்தபட்ச கற்கும் திறன் இதன்மூலம் நடைபெறும். இதனால் இதை நடைமுறைப்படுத்துகிறோம்.

ஆனாலும், பல மாதங்களாக பள்ளிகள் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த அலகுத்தேர்வில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், ‘ஸ்மார்ட் போன்’ வசதியில் லாத மாணவர்கள், பள்ளிக்கு நேரடியாக வந்து,வினாத் தாளை பெற்றுச் செல்கின்றனர். அவர் கள் பள்ளிக்கு ஆர்வத்தோடு வந்து செல்வதை காண முடிகிறது. இருக்கும் சூழலில் பள்ளியைத் திறந்து, சமூக இடைவெளியோடு பாடம் நடத்துவதில் தவறேதும் இல்லை” என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக சில முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பேசியபோது, “நாங்கள் கூறும் கருத்துகள் ஏற்கப்படுவதில்லை. அதிகாரிகள் உத்தரவை பின்பற்றும் அதிகாரிகளாகவே நாங்களும் இருக்கிறோம்” என்கின்றனர். மாணவர்கள் பள்ளியோடும், ஆசிரியர் களோடும் தொடர்பில் இருக்கிறார்களா என் பதை அறிவதற்காகவே இந்த அலகுத் தேர்வு பள்ளிக் கல்விதுறையால் நடத்தப்படுகிறது.

பிளஸ் 1 வகுப்பில் இடைநின்ற மாணவர்கள் சிலரும் அண்மையில் வெளிவந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், மாணவர்களின் தற்போதையை நிலையை அறிந்து கொள்ளவும் இணையம் வழியே இது போன்ற தேர்வுகள் நடத்துவது அவசியமானது என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்"

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews