புதுவையில் பள்ளிகள் மீண்டும் திறப்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என பேரவையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் குறிப்புகளை, குறிப்பு எடுக்கும் அரசுத் துறை செயலர் மற்றும் இயக்குனர்கள் சரியாக சட்டப்பேரவைக்கு வருவதில்லை என்றும் அவர்களை சட்டப்பேரவை முடியும் வரை சட்டப்பேரவை அலுவல்களை குறிப்பெடுக்க வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என, சட்டப் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை செயலர் தலைமையில் ஆலோசித்தனர். இதுகுறித்து சட்டப் பேரவைத் தலைவர் கூறும்போது, தலைமைச் செயலர் தலைமையில் அனைத்துத்துறை செயலர்களும் மற்றும் இயக்குனர்களும் சட்டப்பேரவை தொடங்கி முடியும் வரை இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு வராதவர்கள் மீது தலைமை செயலரிடம் தெரிவித்து, பின்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுத்துறை அதிகாரிகள் உடனடியாக சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் புதுவையில் பள்ளிகள் மீண்டும் திறப்பதை பரிசீலனை செய்யவும், புதுவைக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள தற்காலிக ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று, சட்டசபையில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.