சென்னை ஐஐடியில், ஆன்லைன் தரவு அறிவியல் பாடத்திட்டத்துக்கு, வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2026ம் ஆண்டில், 11.5 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள, வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்றான தரவு அறிவியல் துறையானது, கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஐஐடியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் பிரிவில் இந்தியா முழுவதும் பல்வேறு படிப்புகளை முடித்த 8,154 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், ஐஐடி சென்னை சார்பில், ஆன்லைன் பாடத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 30ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Search This Blog
Tuesday, August 10, 2021
Comments:0
ஐஐடியில் தரவு அறிவியல் படிக்க விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.