பள்ளிகளில் தேச பக்தி பாடங்கள், யோகா வகுப்புகள் – டெல்லி முதல்வர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 16, 2021

Comments:0

பள்ளிகளில் தேச பக்தி பாடங்கள், யோகா வகுப்புகள் – டெல்லி முதல்வர் அறிவிப்பு

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் தேசப்பக்தி பாடத்திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்படும். மேலும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் மாநில அரசு சார்பில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தேசபக்தி மற்றும் யோகா வகுப்புகள் :
தலைநகர் டெல்லியில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. டெல்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் பல்வேறு பாடங்களை நாம் இளம் சமூகத்தினருக்கு கற்று தருகிறோம் ஆனால் தேச பக்தியை கற்று தரவில்லை என்று கூறினார். மேலும் மாணவர்கள் மத்தியில் தேச பக்தியை அதிகரிக்கும் நோக்கில் பாட திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

அதன் ஒரு முயற்சியாக வரும் செப்டம்பர் 27ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில், அரசுப் பள்ளிகளில் தேச பக்தி பாடத்திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்படும். அவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் பாடங்கள் இருக்கும். தேச உணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக யோகாவை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் அவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்மை அளிக்க கூடியவை அதை மிகப்பெரிய இயக்கமாக கொண்டு செல்வதே டெல்லி அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். இதனால் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் மாநில அரசு சார்பில் யோகா வகுப்புகள் நடத்தப்படும். மேலும் 2048ல் 100வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும் வேளையில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஏலத்தில் டெல்லி அரசும் பங்கேற்கும் நிலை வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews