தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அடுத்த கல்வியாண்டில் கணினி அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு திட்டம்:
தமிழகத்தில் 2006-11 ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வி திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு, அதற்காக பாடப் புத்தகங்கள் அச்சிடுதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. மேலும், அதற்காக அச்சடிக்கப்பட்ட சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் கழிவுகளாக மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டால் அதன் மூலம் சுமார் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவார்கள். எனவே இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கணினி அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் போதிய கணினி அறிவியல் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக கணினி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே தகவல் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள வைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.