செய்தி வெளியீடு எண். 30 / 2021; நாள்: 30.08.2021 - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் - மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

செய்தி வெளியீடு எண். 30 / 2021; நாள்: 30.08.2021 - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் - மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்

செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண். 30 / 2021
நாள்: 30.08.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்
திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்.

கோவிட்-19 கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில், பள்ளி மற்றும் அரசு கல்லூரிகள் வரும் 01.09.2021 முதல் திறக்கப்பட உள்ளது. எனவே, 2021-22 கல்வியாண்டில், மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள பள்ளிகளில் வழங்கப்பட்ட அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி தெரிவித்துக்கொள்கிறோம். அளிக்கப்படுகிறது என்பதை

அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI, Government College, Government Polytechnics) பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்ட தகவலை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews