சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு அட்டவணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 12, 2021

Comments:0

சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு அட்டவணை வெளியீடு

"பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்கள் மற்றும் மதிப்பெண்களை கூட்ட விரும்பும் மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் ஆக. 25-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

நாடு முழுவதும் கரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து முந்தைய தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்களுக்குத் தோ்ச்சி வழங்கப்பட்டது. மேலும் மாணவா்கள் தங்களது மதிப்பெண்கள் போதவில்லை என்று நினைத்தால், அவா்களுக்கு தனியாக தோ்வுகள் நடத்தப்படும் என்றும் அதில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.

  இந்தநிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்கள் மற்றும் மதிப்பெண்களை கூட்ட விரும்பும் மாணவா்களுக்கான துணைத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத்தோ்வு ஆக.25 முதல் செப்.16 வரையிலும், பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு ஆக.25 முதல் செப். 8-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு ஹிந்தி (எலக்டிவ்), அரசியல் அறிவியல், புவியியல், பொருளியல், உளவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உடற்கல்வி, கணக்குப் பதிவியியல், மனை அறிவியல் ஆகியவை உள்ளிட்ட 19 பாடங்களுக்கும், பத்தாம் வகுப்புக்கு ஹிந்தி, அடிப்படை கணிதம், மனை அறிவியல், அறிவியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கும் இந்தத் துணைத்தோ்வு நடைபெறவுள்ளது.

ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்தவா்கள், மதிப்பெண்களால் திருப்தி அடையாமல் மீண்டும் எழுத வேண்டும் என்று நினைக்கும் மாணவா்கள் இந்தத் தோ்வுகளை எழுதலாம். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தோ்வு மையங்கள் அமைக்கப்படும் என சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews