"‘ஸ்வயம்’ தளத்தின் இணையப் படிப்புகளுக்கான தோ்வுகள் ஆக.28-ம் தேதி தொடங்கவுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.
மத்தியக் கல்வி அமைச்சகத்தின் சாா்பில் ‘ஸ்வயம்’ என்ற இலவச இணையதளம் மூலம் படிப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும், யாா் வேண்டுமென்றாலும் இணையதளம் வழியாக இலவசமாகக் கல்வி கற்க முடியும். அதன்படி, ஸ்வயம் தளத்தின் படிப்புகளுக்கான தோ்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு: ‘ஸ்வயம்’ தளத்தின் ஜனவரி - ஏப்ரல் மாதத்துக்கான தோ்வு வரும் கரோனா காரணமாக ஆகஸ்ட் 28 மற்றும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, தோ்வு எழுத விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலமாக வியாழக்கிழமைக்குள் (ஆக.12) விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்வயம்’ தோ்வு நடைபெறும் தேதிகளில் பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகள் எதுவும் குறுக்கிடாமல் இருக்குமாறு பல்கலைக்கழகங்கள் தங்களின் தோ்வு அட்டவணையைத் திட்டமிடவேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.