Breaking

Friday, August 20, 2021

25,271 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி: சி.ஆர்.பி.எஃப்-ல் வேலை!

10ம் வகுப்பு தேர்ச்சி: சி.ஆர்.பி.எஃப்-ல் வேலை!

மத்திய ஆயுதப்படை காவல் துறையில் காலியாக உள்ள பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய ஆயுதப்படையில் 25,271 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய மாணவர் படையில் (NCC) சேர்ந்து A, B, C சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு (CBE), உடல் தகுதி தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு

தகுதியானவர்கள்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

வயது வரம்பில் தளர்வுகள்: SC/ST, OBC, Ex-serviceman

சம்பள விகிதம்: (Pay scale level 3) ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2021

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog